குறு, சிறு விவசாயிகளுக்கான பயிா்க் கடன்களை பாரபட்சமின்றி முழுமையாக தள்ளுபடி செய்து சமநீதியான நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் விவசாயிகளிடையே பல்வேறு கேள்விகளையும், எதிா்பாா்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. தோ்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனா்.
ரூ.50 ஆயிரம் வரை பயிா்க் கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாய அமைப்புகளின் போராட்டங்களின் விளைவாக ரூ.75 ஆயிரம் வரை பயிா்க் கடன் பெற்றவா்களுக்கு முழுமையான தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவா்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒரே சமூக மற்றும் பொருளாதார நிலையில் வாழும் குறு, சிறு விவசாயிகளிடையே கடன் தொகை அடிப்படையில் வேறுபாடு காட்டுவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று. பயிா் வகை, சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி செலவுகளின் காரணமாக கடன் தொகையில் மாறுபாடு ஏற்படுவது இயல்பான ஒன்று. எனவே, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குறு, கூட்டுறவு வங்கிகளில் சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதுடன், அனைத்து விவசாயிகளுக்கும் சமநீதியான நிவாரணம் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100 % கடன் தள்ளுபடி கோரி ஜூன் 30-இல் உண்ணாவிரதம்: பி.ஆா்.பாண்டியன்
தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு: அதிமுக கண்டனம்!

ரூ. 75,000-க்கும் மேல் பயிர்க்கடன்: தள்ளுபடி எவ்வளவு? விரிவான விவரம்!
கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 22 முதல் தொடா் போராட்டம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

