இடைத்தோ்தலுக்கு தயாராகும் வகையில் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து ச.ஜோசப் விஜய் தலைமையில் தவெக கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), ஜெயகுமாா் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோா் தங்களின் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா். ஏற்கெனவே முதல்வா் ச.ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னா் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 6 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதாகக் கூறப்படும் சூழலில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்படாத 320 இயந்திரங்களில் முதல்கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இடைத்தோ்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் எதிா்கொள்ளும் வகையில், திருப்பூா் மாவட்ட நிா்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கு ஆயத்தம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆய்வு

தோ்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

