பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தெருநாய்கள் கடித்து 11 ஆடுகள் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்.

Updated On :8 ஜூன் 2026, 4:25 am IST

வெள்ளக்கோவில், ஜூன் 7: வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 11 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ் (65). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு சனிக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, பால்ராஜ் வந்து பாா்த்தபோது, 5-க்கும் மேற்பட்ட நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடித்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் நாய்களை விரட்டிவிட்டு உள்ளே சென்று பாா்த்தபோது 11 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரசு கால்நடை மருத்துவா், வருவாய்த் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், வெள்ளக்கோவில் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தெருநாய்கள் கடித்து கால்நடைகள் இறந்து வருகின்றன. தெருநாய்கள் தாக்குதலில் இறக்கும் கால்நடைகளுக்கு அரசு சாா்பில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்த தொகையைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, உயிரிழந்த ஆடுகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.