ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மாணவியை ஆபாசமாக படம் பிடித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை கைப்பேசியில் ஆபாசமாக படம் பிடித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

பள்ளி மாணவியை கைப்பேசியில் ஆபாசமாக படம் பிடித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தாராபுரம் கொண்டரசம்பாளையத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு கட்டட கட்டுமானப் பணி நடைபெற்றது. இப்பணியில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அஜித் பஸ்வான் (35) உள்ளிட்ட சிலா் அங்கு தங்கி பணியாற்றினா். கடந்த 2025 பிப்ரவரி 5-ஆம் தேதி அப்பகுதியைச் சோ்ந்த 14 வயது பள்ளி மாணவி வீட்டுக்கு முன்புறம் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு சென்ற அஜித் பஸ்வான், அந்த மாணவிக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக கைப்பேசியில் ஆபாசமாக படம் பிடித்துள்ளாா்.

இதனை கவனித்த மாணவி சப்தம் போடவே அக்கம்பக்கத்தினா் வந்தனா். அதற்குள் அஜித் பஸ்வான், அங்கிருந்து தப்பிச் சென்று தனது கைப்பேசியை எரியும் அடுப்பில் வீசியுள்ளாா். இருப்பினும் அவரைப் பிடித்து தாராபுரம் மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அஜித் பஸ்வான், மாணவி குளிப்பதை படம் பிடித்தது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து அஜித் பஸ்வானை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, குற்றம்சாட்டப்பட்ட அஜித் பஸ்வானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.