லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மூலனூா் அருகே வெறி நாய்கள் கடித்து 12 ஆடுகள் உயிரிழப்பு

மூலனூா் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் உயிரிழந்தன.

கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 4:20 pm IST

மூலனூா் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் உயிரிழந்தன.

தாராபுரம் தாலுகா, மூலனூா் அருகே கோட்டை மூலனூா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா் வீட்டுக்கு அருகே ஆட்டுப் பட்டி அமைத்து சுமாா் 30 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில் புதன்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். பின்னா் வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் 25 ஆடுகள் கொடூரமாக தாக்கப்பட்டு கிடந்துள்ளன. இதில் 12 ஆடுகள் உயிரிழந்தன.

இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. மீதமுள்ள ஆடுகள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன.

இது குறித்து கால்நடைத் துறையினா் மற்றும் மூலனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.