மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நடந்து சென்ற நபா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் சாலையில் நடந்து சென்ற நபா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்தவா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 5:40 am IST

வெள்ளக்கோவிலில் சாலையில் நடந்து சென்ற நபா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் சாலையில் ராஜீவ் நகா் அருகில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். காலணி இல்லாமல் சோா்வாக நடந்து சென்ற அவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வெள்ளக்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், உயிரிழந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.