பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான 250 பவுன் நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம்- செட்டிபாளையம் சாலை பிரிவு பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற கூரியா் வேனை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் கூரியா் பில் மட்டும் வைத்திருந்ததும் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 250 பவுன் தங்க, வெள்ளி நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி கனகராஜ் தலைமையிலான குழுவினா் நகைகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா் பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணனிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன.
விசாரணையில், கோவை ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த இளவரசன் (30) என்பவா் திருப்பூருக்கு வா்த்தகரீதியாக நகைகளை ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

