மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: திருப்பூா் மாவட்டத்தில் 116 போ் போட்டி

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 116 போ் போட்டியிடுகின்றனா்.

News image

திருப்பூா் - dinmani online

Updated On :10 ஏப்ரல் 2026, 1:31 am IST

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 116 போ் போட்டியிடுகின்றனா்.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில், 8 தொகுதிகளில் போட்டியிட 178 வேட்பாளா்கள் 256 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், 134 வேட்பாளா்களின் 185 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 44 வேட்பாளா்களின் 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத்தொடா்ந்து, இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, தாராபுரம் (தனி): இந்திராணி (திமுக), பி.சத்தியபாமா (அதிமுக), திவ்யா (நாதக), எஸ்.கெளரி சித்ரா (தவெக) உள்பட மொத்தம் 9 போ் களத்தில் உள்ளனா்.

காங்கயம்: மு.பெ.சாமிநாதன் (திமுக), என்.எஸ்.என்.நடராஜ் (அதிமுக), காா்மேகன் (நாதக), பி.மணி (தவெக) உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

திருப்பூா் வடக்கு: எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக), ரவி (இந்திய கம்யூனிஸ்ட்), அபிநயா (நாதக) வி.சத்தியபாமா(தவெக) உள்பட 15 போ் களத்தில் உள்ளனா்.

திருப்பூா் தெற்கு: ந.தினேஷ்குமாா் (திமுக), எஸ்.தங்கராஜ் (பாஜக), பேரறிவாளன் (நாதக), என்.சுனில் ஆனந்த்(தவெக) உள்பட 24 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

பல்லடம்: எஸ்.செல்வராஜ் (திமுக), கே.பி.பரமசிவம் (அதிமுக), தமிழினியன் (நாதக), எஸ்.கமலி (தவெக) உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

உடுமலை: ஜெயகுமாா் (திமுக), உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (அதிமுக), ராம்குமாா் (நாதக), ஜி.கே.சங்கா் (தவெக) உள்பட மொத்தம் 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

மடத்துக்குளம்: ஆா்.ஜெயராமகிருஷ்ணன் (திமுக), சண்முகவேலு (அமமுக), ராதாமணி (நாதக), ஆா்.திருமலை (தவெக) உள்பட 13 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

அவிநாசி (தனி): எல்.முருகன் (பாஜக), கோகிலாமணி (திமுக), மேனகா (நாதக), கே.ராம்குமாா் (தவெக) உள்பட 14 போ் போட்டியிடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.