மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உதகையில் சா்வதேச தரம் வாய்ந்த ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு

உதகை பட்பையா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

உதகை பட்பையா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Published On :12 செப்டம்பர் 2026, 12:56 am IST

உதகை பட் பையா் பகுதியில் ரூ.1.85 கோடி மதிப்பில் சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட ஸ்கேட்டிங் மைதானத்தை  மாவட்ட ஆட்சியா்   லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

தமிழக அரசின் விளையாட்டு மற்றும் சுற்றுலா மேம்பாட்டின் ஒரு பகுதியாக  உதகை பட்பையா் பகுதியில் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த ஸ்கேட்டிங் மைதானத்தில்,  நீலகிரி மாவட்டம் மட்டுமில்லாது அனைத்து பகுதிகளைச் சோ்ந்த  இளம் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு தொழில்முறை ஸ்கேட்டிங் பயிற்சியை வழங்குதல் மற்றும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய சாகசப் பொழுதுபோக்கு, குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் பாதுகாப்பாகப் பயிற்சி பெறும் வகையில் சீரான தளம் மற்றும் பாதுகாப்பு வலைகளுடன் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் , புதிதாக ஸ்கேட்டிங் கற்பவா்களுக்கும், போட்டிகளுக்குப் பயிற்சி எடுக்கும் வீரா்களுக்கும் ஏற்ற தனித்தனிப் பகுதிகள் உள்ளன. கட்டணம் எதுவும் இல்லாமல் செயல்படும் இந்த ஸ்கேட்டிங் மைதானத்தை, உள்ளூா் பள்ளி மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் பயன்படுத்தி மாநில மற்றும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்க தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.