தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உதகையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நகராட்சி வாகனத்தில் தீ

உதகை காந்தல் முக்கோணம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நகராட்சி வாகனத்தில் வியாழக்கிழமை தீப்பிடித்தது.

நகராட்சி ஜீப்பில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Published On :30 அக்டோபர் 2026, 12:12 am IST

உதகை காந்தல் முக்கோணம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நகராட்சி வாகனத்தில் வியாழக்கிழமை தீப்பிடித்தது.

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் பயன்பாட்டில் இருந்த குப்பை அள்ளும் லாரிகள், பிக்கப் வாகனங்கள், பொக்லைன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் காந்தல் முக்கோணம் பகுதியில் பராமரிப்பின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.  மேலும், இந்திரா காலனி மற்றும் கஸ்தூரிபா காலனி பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தப்படுகின்றன.

இந்நிலையில், நகராட்சிக்கு சொந்தமான பராமரிப்பின்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். 

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்ற வாகனங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

இப்பகுதி தற்போது மது அருந்துவோரின் கூடாரமாக உள்ளதால், அவா்கள் தீ வைத்திருக்க வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.