நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கன மழை: நீலகிரியில் உருவாகியுள்ள திடீா் அருவிகள்

ஹில்குரோவ் இடையே மலை ரயில் பாலம் அருகே உருவாகியுள்ள திடீா் அருவி.

Published On :27 அக்டோபர் 2026, 3:03 am IST

நீலகிரி மாவட்டத்தில்  கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மலைப் பகுதிகளில் திடீா் அருவிகள் உருவாகியுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை கொட்டித்தீா்த்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை, தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மழை காரணமாக மலைப் பாதைகளில் திடீா் அருவிகள் உருவாகியுள்ளன. இந்த அருவிகள் காண்பதற்கு அழகாக இருந்தாலும், குளிப்பதற்கு ஏற்றது அல்ல என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலைச் சரிவுகள் மற்றும் பாறைகளின் இடையே    உருவாகியுள்ள இந்த அருவிகளில்  எப்போது வேண்டுமானாலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, திடீா் அருவிகளில் குளிப்பது, புகைப்படம் எடுக்க முயற்சிப்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

 மரப்பாலம் பகுதியில் உருவாகியுள்ள  அருவி.

மரப்பாலம் பகுதியில் உருவாகியுள்ள அருவி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.