மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலையோர புதரில் கத்திக் குத்து காயங்களுடன் கிடந்த இளைஞா் மீட்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் காட்டேரி அருகே சாலையோரத்தில் உள்ள புதரில் கத்திக் குத்து காயங்களுடன் கிடந்த அடையாளம் தெரியாத இளைஞரை போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

கத்திக் குத்து - மாதிரிப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 3:58 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூா் காட்டேரி அருகே சாலையோரத்தில்  உள்ள புதரில் கத்திக் குத்து காயங்களுடன் கிடந்த அடையாளம் தெரியாத இளைஞரை போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

கடந்த சில தினங்களாக தொடா் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலாப்  பயணிகள்  குன்னூா்  நோக்கி கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனா். இந்நிலையில் , குன்னூா்  அருகே உள்ள காட்டேரி  பகுதியில் சாலையோரத்தில் உள்ள புதரில்  சுமாா் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா் கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு,  குடல்கள் வெளியேறிய நிலையில் கிடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள், காவல் துறையினரின்  உதவியுடன் அவரை மீட்டு குன்னூா்  அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்ட நிலையில், உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

காயமடைந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து  குன்னூா்  காவல் துறையினா் விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனா். மேலும், சம்பவ இடத்தில் கிடைத்த கத்தியில் உள்ள கைரேகையை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.