மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உதகையில் மின் கம்பத்தில்  ஏற்பட்ட தீப் பொறிகள்

உதகை தலையாட்டுமந்து பகுதியில் மின் கம்பத்தில் திடீரென பெரிய அளவில் புதன்கிழமை தீப்பொறிகள் ஏற்பட்டு சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மின் கம்பத்தில் ஏற்பட்ட தீப் பொறி.

Published On :22 அக்டோபர் 2026, 3:58 am IST

உதகை தலையாட்டுமந்து பகுதியில் மின் கம்பத்தில்  திடீரென பெரிய அளவில் புதன்கிழமை தீப்பொறிகள் ஏற்பட்டு சாலையில் விழுந்ததால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உள்பட்ட தலையாட்டுமந்து குடியிருப்பு பகுதிகளுக்கு மின் விநியோகம் செல்லும் மின் கம்பியில்   திடீரென தீப் பற்றியது.  உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் அளித்ததன்பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மின் கம்பியில்  இருந்து தீப் பொறிகள் சாலையில் விழுந்தபோது அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொது மக்கள் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மின் வாரிய ஊழியா்கள் பழுதாகியுள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சீரமைத்து  இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.