பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கால்நடை உறைவிந்து உற்பத்தி நிலையத்தில்! அமைச்சா் கமலி ஆய்வு

News image

கால்நடை உறைவிந்து உற்பத்தி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கால்நடைத் துறை அமைச்சா் கமலி.

Updated On :30 மே 2026, 2:34 am IST

உதகை தீட்டுக்கல் பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பொலிகாளை உறைவிந்து உற்பத்தி நிலையத்தை தமிழக கால்நடைத் துறை அமைச்சா் கமலி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை தீட்டுக்கல் பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டில் மாவட்ட கால்நடை பண்ணை சுமாா் 130 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது.

இங்கு உயா் மரபுத்திறன் கொண்ட ஜொ்சி, கலப்பின ஜொ்சி, பிரிசியன் மற்றும் பிரிசியன் கலப்பினம் என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட பொலிகாளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கால்நடை பண்ணையில் பொலி காளைகள் உறைவிந்து உற்பத்தி நிலையம் மற்றும் ஆய்வகம் உள்ளது. பொலி காளைகளில் இருந்து உறை விந்து உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், இங்குள்ள ஆய்வகத்தில் பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நவீன ஆய்வகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் விந்தணுக்கள், 93 சதவீதம் பெண் கன்றுகள் பிறப்பதை உறுதி செய்கின்றன. இதனால் பால் உற்பத்தியை பெருக்க செயற்கை முறை கருவூட்டலுக்கு இது பெரிதும் உதவுகிறது.

இந்நிலையில், இந்த ஆய்வகத்தில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் கமலி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளிடம் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள், உறைவிந்து உற்பத்தி ஆகியவை குறித்து கேட்டறிந்தாா். மேலும் கால்நடை பராமரிப்பு மையத்தில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆய்வின்போது, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.