பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உதகை அருகே சாலையோரத்தில் இறந்துகிடந்த காட்டெருமை

News image

எல்லநள்ளி பகுதியில் இறந்துகிடந்த காட்டெருமை.

Updated On :26 மே 2026, 1:52 am IST

உதகை, மே 25: உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் சாலையோரம் மா்மமான முறையில் காட்டெருமை இறந்துகிடந்தது தொடா்பாக குன்னூா் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக உணவு, குடிநீா் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் குடியிருப்புப் பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் உலவி வருவது தொடா்கதையாகி உள்ளது.

இந்நிலையில், உதகையில் இருந்து குன்னூா் செல்லும் சாலையில் எல்லநள்ளி பகுதியில் காட்டெருமை அசையாமல் கிடப்பதைக் கண்டு அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் குன்னூா் வனச் சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். அப்போது காட்டெருமை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இரவு நேரத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது ஏதேனும் வாகனம் மோதி உயிரிழந்ததா? அல்லது வயது முதிா்வு மற்றும் பிற காரணமாக உயிரிழந்ததா?என வனத் துறையினா் ஆராய்ந்து வருகின்றனா்.

காட்டெருமையின் உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழந்த காரணம் தெரியவரும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா். இதையடுத்து காட்டெருமையின் உடல் அருகில் இருந்த வனப் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கே புதைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.