பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உதகை மலா்க் கண்காட்சி: ஒரு வாரத்தில் 1.50 லட்சம் போ் கண்டுகளிப்பு

News image

மலா்க் கண்காட்சியை காண உதகை தாவரவியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :25 மே 2026, 1:54 am IST

உதகை, மே 24: உதகை மலா்க் கண்காட்சியை ஒரு வாரத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மே மாதம் மலா்க் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான128-ஆவது மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 18-ஆம் தேதி தொடங்கியது.

மே 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் கொய்மலா்கள், கிரைசந்திமம், ரோஜா உள்ளிட்ட 7 லட்சம் மலா்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மகாபலிபுரம் கோயில், திருவாரூா் தோ், திருவள்ளுவா் சிலை, தமிழக வரைபடம், தமிழா்களின் பண்பாடு உள்ளிட்ட 26 மலா் அலங்கார வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், 50,000 தொட்டிகளில் பல்வேறு வகையான மலா் செடிகள் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்முடன் கண்டுகளித்து வருகின்றனா்.

மலா்க் கண்காட்சியை கடந்த 7 நாள்களில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்துள்ளனா் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.