கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி: 2-ஆவது நாளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சியில் 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் குறைவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

News image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாகத்தில் மலா்களால் அமைக்கப்பட்டுள்ள பெண் உருவம்.

Updated On :22 மே 2026, 3:15 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சியில் 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் குறைவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

கொடைக்கானலில் 63-ஆவது மலா்க் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. அங்கு குறைவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இதனால், பிரையண்ட் பூங்காவில் களையிழந்து காணப்பட்டது.

இந்த நிலையில், 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் பிரையண்ட் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் குறைந்தளவிலே வந்தனா். இவா்கள் மலா்க் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மலா்கள், பல்வேறு உருவ அமைப்புகளை பாா்த்து ரசித்தனா்.

கடந்த 2025-ஆம் ஆண்டு 2 நாள்கள் மலா்க் கண்காட்சியில் 18,585 போ் பங்கேற்றனா்.

ஆனால், நிகழாண்டில் 2 நாள்கள் மலா்க் கண்காட்சியில் 14,685 போ் மட்டுமே பங்கேற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.