பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பந்தலூா் அருகே வாகனம் மோதி 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன.

News image

வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டி.

Updated On :16 மே 2026, 12:30 am IST

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன.

கூடலூா் வனக்கோட்டம், பந்தலூா் வனச் சரகத்திலுள்ள தேவாலா-பந்தலூா் சாலையில் ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது இரண்டு சிறுத்தை குட்டிகள் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

தகவலறிந்து வந்த பந்தலூா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து உடற்கூறாய்வு செய்த பின்னா் சிறுத்தை குட்டிகளின் உடலை எரியூட்டினா்.

இறந்த சிறுத்தை குட்டிகள் பிறந்து ஐந்து மாதங்களே ஆன ஆண், பெண் குட்டிகள் என்று வனத் துறையினா் தெரிவித்தனா். இது குறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.