குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக சிறுத்தை, கரடி, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், குன்னூரில் உள்ள பந்துமை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில் உலவிய சிறுத்தையைப் பாா்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலாஸ் கெந்தளா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம்

உதகை அருகே சாலையோரத்தில் இறந்துகிடந்த காட்டெருமை

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை உலவியதால் மக்கள் அச்சம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

