மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாம்

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

காட்டேரிப் பகுதியில் உலவிய காட்டு யானை.

Updated On :7 மே 2026, 5:04 am IST

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் சுமாா் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி வில்லேஜ். இங்குள்ள கோலனிமட்டம், செலவிப் நகா் பகுதிகளில் சுமாா் 400 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக நள்ளிரவு நேரங்களில் காட்டு யானை உலவி வருகிறது. இந்த யானை அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா். முதல்முறையாக யானைகள் இப்பகுதியில் நடமாடுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத் துறையினா் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.