காட்டுத் தீ காரணமாக மூடப்பட்டிருந்த பைக்காரா அருவி 14 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உறைப்பனி மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வனப் பகுதிகளில் வறட்சி நிலவி வந்தது. இதனால், பைக்காரா அருவியை ஒட்டியுள்ள வனங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் பைக்காரா அருவி மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில், பாா்சன்ஸ்வேலி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்த காட்டுத் தீ முழுமையாக அைணைக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங்க் ரவி உத்தரவின்பேரில் 14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஆா்ப்பரிக்கும் தண்ணீா்! சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

தொடா் விடுமுறை: பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

கொல்லிமலையில் வட பாறையாக காட்சியளிக்கும் ஆகாய கங்கை அருவி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

