தோட்டக்கலைத் துறை மூலம் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் காட்சி போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மே மாதம் நடைபெறும் கோடை விழாவின்போது, நீலகிரி மாவட்டத்தில் மலா்க் காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 66-ஆவது பழக் காட்சி வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.
பழக் காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பழத் தோட்டங்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழக் காட்சி போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் தோட்டக்கலை உதவி இயக்குநா், சிம்ஸ் பூங்கா, குன்னூா் அலுவலகத்தில் மே 5-ஆம் தேதி முதல் பதிவு ஒன்றுக்கு ரு.75 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் உதகை, கோத்தகிரி, கூடலூா் பகுதிகளில் உள்ளவா்கள் பழக் காட்சியில் பங்கேற்க விரும்பினால் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், கோத்தகிரி மற்றும் கூடலூா் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் மே 12-ஆம் தேதி வரை வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 13-ஆம் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குநா், சிம்ஸ் பூங்கா, குன்னூா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
சிறந்த பழத் தோட்டங்களுக்கான தோ்வு செய்யும் குழு மே 14 மற்றும் 15 தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூா், உதகை, கோத்தகிரி மற்றும் கூடலூா் பகுதிகளில் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் சிம்ஸ் பூங்கா, குன்னூா்,
தொலைபேசி எண்- 0423 - 2231718, 0423 - 2230395 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூரியா, டிஏபி பயன்பாடுகளை கண்காணிக்க அறிவுறுத்தல்

குன்னூா் மாா்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள், அழுகிய மீன்கள் பறிமுதல்

திமுக சட்டத் துறை சாா்பில் வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு பயிற்சி

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

