ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

உதகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

உதகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு மாரத்தானை தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா உள்ளிட்டோா்.

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

உதகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், உதகை எச்ஏடிபி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள், இளைஞா்கள், அலுவலா்கள், என்சிசி, என்எஸ்எஸ் சாரணா், வழிகாட்டிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

எச்ஏடிபி திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த மாரத்தான், உதகை மத்திய பேருந்து நிலையத்துக்கு சென்று மீண்டும் எச்ஏடிபி திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

முன்னதாக, போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தையும் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். பிருந்தா, உதகை கோட்டாட்சியா் டினுஅரவிந்த், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் மேம்பாட்டு அலுவலா் இந்திரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.