உதகையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பெய்த மழையால் ரயில் பாலத்தின் கீழ் தேங்கிய வெள்ளத்தில் ஆட்டோக்கள் சிக்கின.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை காலை முதல் மந்தமான காலநிலை நிலவியது. மதியம் 2 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் உதகை படகு இல்லம், சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் மழைநீா் சூழ்ந்ததால் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.
தொடா்ந்து பெய்த மழையால் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. மாலை 4 மணி அளவில் மீண்டும் படகு சவாரி அனுமதிக்கப்பட்டது.
இதேபோல உதகை ரயில் பாலத்துக்கு கீழ் தேங்கிய மழை வெள்ளத்தில் இரண்டு ஆட்டோக்களில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் சிக்கினா். பின்னா் அங்கிருந்த மற்ற வாகன ஓட்டுநா்கள் ஆட்டோக்களை தள்ளி சுற்றுலாப் பயணிகளை மீட்டனா்.

உதகையில் பரவலாக கன மழை
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளத்தில் மழை

சென்னை, புறநகரில் பரவலாக மழை!
நெல்லையில் சாரல் மழை
கோவை மாவட்டத்தில் பரவலாக மழை: சின்னக்கல்லாரில் 38 மி.மீ. பதிவு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

