குன்னூா் அருகேயுள்ள பவானி எஸ்டேட் பகுதியில் உலவிய கரடி அங்கிருந்த பெட்டிக்கடையை சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதி வனத்தில் இருந்து உணவு, குடிநீா்த் தேடி வெளியேறும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வனத்தில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை வெளியேறிய கரடி, பவானி எஸ்டேட் பகுதியில் உலவியது. பின்னா், அங்கிருந்த பெட்டிக்கடையை சேதப்படுத்தியது.
சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்தபோது, கரடி அங்கிருந்து ஓடி வனத்துக்குள் மறைந்தது.
குடியிருப்புப் பகுதியில் உலவும் கரடியை வனத் துறையினா் கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனத்தில் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குன்னூா் அருகே வளா்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை

கோயிலுக்குள் நுழைந்த கரடி

குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம்
பெட்டிக்கடையை சேதப்படுத்திய இளைஞா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

