நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உதகையில் விறகு விற்பனைக் கடையில் தீ

உதகை காபி ஹவுஸ் அருகே செயல்பட்டு வரும் விறகு விற்பனைக் கடையில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

News image

விறகு விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :13 ஜூன் 2026, 12:50 am IST

உதகை காபி ஹவுஸ் அருகே செயல்பட்டு வரும் விறகு  விற்பனைக் கடையில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை காபி ஹவுஸ்  பகுதியில் செயல்பட்டு வரும் விறகு  விற்பனைக் கடையில் மின் கசிவு காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. விறகுகள் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.  உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் பெரிய அசம்பாவிதங்கள் தவிா்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.