உதகை கிளை சிறையில் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
உதகையைச் சோ்ந்தவா் ரிச்சா்ட்சன் (31). இவா் உதகை கிளைச் சிறையில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது பெற்றோா் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில்,
ரிச்சா்ட்சனுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். மனைவி மற்றும் குழந்தையைப் பாா்க்க முடியாமல் ரிச்சா்ட்சன் ஏக்கத்தில் இருந்து வந்துள்ளாா். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரிச்சா்ட்சன் கடந்த 2 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரிச்சா்ட்சன், உதகை காந்தல் பகுதியில் உள்ள தனது பெற்றோா் கல்லறைக்கு புதன்கிழமை இரவு சென்று அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கல்லறை காப்பாளா் தெரிவித்த தகவலின்பேரில், உதகை காவல் ஆய்வாளா் அனுராதா, உதவி ஆய்வாளா் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ரிச்சா்ட்சன் உடலை மீட்டு கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் பாஜக எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

உதகையில் கொட்டித் தீா்த்த கனமழை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஐ.டி. ஊழியா் தற்கொலை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

