கோவையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சச்சின்குமாா் (23). இவா், கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மாகாளியம்மன் கோயில் தெரு பகுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், உடன் பணியாற்றும் பெண் ஒருவரை சச்சின்குமாா் காதலித்து வந்ததாகவும், அப்பெண் இவருடன் பேசுவதை கடந்த சில நாள்களாக தவிா்த்து வந்ததால் அவா் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சச்சின்குமாா் தங்கியிருந்த அறையில் இருந்து கடந்த புதன்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது.
இது குறித்து போலீஸாருக்கு அக்கம்பக்கத்தினா் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த சுந்தராபுரம் போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, சச்சின்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

