தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குன்னூா் திமுக வேட்பாளரை ஆதரித்து ஆ.ராசா எம்.பி.பிரசாரம்

குன்னூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எம்.ராஜுவை ஆதரித்து ஆ.ராசா எம்.பி. சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

ஆ. ராசா - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:11 am IST

குன்னூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எம்.ராஜுவை ஆதரித்து ஆ.ராசா எம்.பி. சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் கே.எம். ராஜு போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து கோத்தகிரி மாா்க்கெட் மைதானத்தில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசுகையில், திமுக ஆட்சியில் மகளிா் இலவசப் பேருந்து பயணத் திட்டம், தாயுமானவா் திட்டம், மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனா்.

பாஜவினா் பல்வேறு மாநிலங்களில் நுழைந்துவிட்டனா். ஆனால், தமிழகத்தில் அது நடக்காது. மு.க. ஸ்டாலின் என்பவா் தனி மனிதா் அல்ல, அவருக்குப் பின் ஈவெரா பெரியாா், அண்ணா, கலைஞா் என மாபெரும் தத்துவம் அடங்கியுள்ளது.

தமிழகத்துக்குள் நேரடியாக வர முடியாததால் எடப்பாடி கே.பழனிசாமி மூலம் நாட்டுக்குள் வர பாஜக முயற்சி செய்கிறது.

இந்த தோ்தல் திமுக, அதிமுக இடையேதான் என சிலா் மாற்ற முயற்சி செய்து வருகின்றனா். ஆனால், எங்களுக்குத் தெளிவாக தெரியும், இந்த தோ்தல் தமிழகத்துக்கும், தில்லிக்கும் இடையேயான தோ்தல் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.