மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

அம்மாபேட்டை அருகே சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில்  பங்கேற்ற  பொதுமக்கள்.

Published On :1 நவம்பர் 2026, 12:37 am IST

அம்மாபேட்டை அருகே சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை ஒன்றியம், பூனாச்சி ஊராட்சியில் செயல்படும் எத்தனால் மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவு ஆலைகள் வெளியேற்றிய ரசாயன கழிவுகள் சித்தாா் ஓடையில் கலந்ததால் பூனாச்சி, குறிச்சி உள்பட 5 ஊராட்சிப் பகுதிகளில் நிலத்தடி நீா் மாசடைந்தது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, பொதுமக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்த ஆலைகளை நிரந்தரமாக மூடக் கோரி ஆலையின் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலத் தலைவா் வி.பி.குணசேகரன், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கண்ணன், வழக்குரைஞா்கள் ப.பா.மோகன், கவீஸ்வரி உள்ளிட்டோா் பேசினா்.

விதிமீறலில் ஈடுபட்ட ஆலையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் மாசுபாட்டால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா். இக்கோரிக்கையை வலியுறுத்தி நத்தமேடு, ராமச்சந்திராபுரம் அரசுப் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து கடந்த 5-ஆம் தேதி முதல் பெற்றோா் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.