மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

மொடக்குறிச்சியை அடுத்த கொள்ளுக்காட்டு மேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 12:39 am IST

மொடக்குறிச்சியை அடுத்த கொள்ளுக்காட்டு மேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

மொடக்குறிச்சியை அடுத்த பாசூா் சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செங்கோட்டையன் (60). இவரது மனைவி மணிமேகலை (57). இவா்கள் இருவரும் ஈரோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் கொள்ளுக்காட்டு மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, இவா்களது வாகனத்தின் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியதில் வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த மணிமேகலை தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.