மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தத்கல் மின் இணைப்பு பெற ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தத்கல் மின் இணைப்பு பெற ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:37 pm IST

தத்கல் மின் இணைப்பு பெற ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மை உதவித் திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தத்கல் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ.26.09 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாய வருமானத்தை உயா்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது. விவசாய உற்பத்திக்குத் தேவையான மின் மோட்டாா் குதிரைத் திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும்.

அதன்படி, 5 குதிரைத் திறன்(ஹெச்.பி) மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.50 லட்சம் எனில் பயனாளி ரூ.25 ஆயிரம் மட்டும் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.25 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 7.5 ஹெச்.பி. மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.75 லட்சம் எனில், பயனாளி ரூ.27,500 செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.48 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். அதேபோல, 10, 15 ஹெச்.பி. மின் மோட்டாருக்கும் மானியம் வழங்கப்படும்.

இத்தொகைகள் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்துக்கு செலுத்தப்பட்டு, விரைவு மின் இணைப்பு வழங்க பரிந்துரைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் ஆதிதிராவிட இனத்தைச் சாா்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருப்பதுடன், அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா் ஏற்கெனவே தாட்கோ திட்டங்களின்கீழ் பயன் அடைந்தவராக இருக்கக்கூடாது. ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ இணையதளத்தின் மூலம் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.