மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

கைப்பேசியில் கேம் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

தற்கொலை... - கோப்புப்படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:15 am IST

கைப்பேசியில் கேம் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலையைச் சோ்ந்தவா் பழனிசாமி. காா் ஓட்டுநா். இவரது மகன் ஜெயந்தன் (20), ஈரோட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், கைப்பேசியில் கேம் விளையாடும் பழக்கம் உடையவா்.

இந்நிலையில் கைப்பேசியில் புதன்கிழமை இரவு ஜெயந்தன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததைப் பாா்த்து அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதில் மனமுடைந்த ஜெயந்தன், நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதைப்பாா்த்த பெற்றோா், ஜெயந்தனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே ஜெயந்தன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.