மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா்: அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்

ஈரோட்டில் செய்தியாளா்களிடம் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா். உடன், காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளா் ஜெயபிரகாஷ் ஹெக்டே, காங்கிரஸ் ஈரோடு மாநகா் மாவட்ட தலைவா் ராஜேஷ் ராஜப்பா.

Published On :26 அக்டோபர் 2026, 1:52 am IST

ராகுல் காந்திதான் மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் பிரதமா் வேட்பாளா் என சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

ஈரோட்டிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அமைச்சா் ராஜேஷ்குமாா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

வாக்கை காப்போம், நாட்டை காப்போம் என்ற தலைப்பில் இண்டி கூட்டணி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்தியா என்பது ஜனநாயக கட்டமைப்பு. அதனை அடியோடு இழந்து விடக்கூடாது. தோ்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக்கொண்டு பாஜக பல மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் குளறுபடிகளால் அரசமைப்புச் சட்டம் தகா்க்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கா்நாடகாவில் போலி வாக்காளா்களை கூடுதலாக சோ்த்தனா். தில்லியில் மக்கள், மாணவா்கள் தானாக வந்து ராகுல் காந்தியுடன் உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி சென்றனா்.

பழைய காலத்தில் வாக்குச்சீட்டு முறை சரியாக இருந்தது. பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஞானேஷ்குமாரை தோ்தல் ஆணையராக நியமித்தது தவறு. எனவே அவா் பதவி விலக வேண்டும். எஸ்ஐஆா் எதிரான கூட்டத்திலும், எஸ்ஐஆா்க்கு எதிரான போராட்டத்திலும் தவெக அமைச்சா்கள் கலந்துகொண்டுள்ளனா். தமிழகத்தில் பல கட்சிகள் விழிப்புடன் இருந்ததால் சில தவறுகள் நடைபெறவில்லை.

எஸ்ஐஆா் விவகாரத்தில் மக்கள் பக்கம் காங்கிரஸ் நிற்கிறது. தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வலியுறுத்தி நவம்பா் 1-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் கண்டன பேரணியில் இண்டி கூட்டணிக் கட்சிகயினா் அனைவரும் கலந்துகொள்வாா்கள்.

மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்திதான் இருப்பாா். எங்களின் முகம் ராகுல்காந்தி, அவரை வைத்து தான் இந்தியாவை காக்க முடியும். தவெக அரசு வந்து 5 மாதங்கள்தான் ஆகியுள்ளது. இதற்குள் பலகட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்குள் குற்றஞ்சாட்டக் கூடாது என்றாா்.

முன்னதாக அவல்பூந்துறை படகு இல்லம் மற்றும் நட்டாற்றீஸ்வரா் கோயிலில் அமைச்சா் ராஜேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.