மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திகினாரை ரங்கசாமி மல்லிகாா்ஜுனா கோயில் தெப்பத் திருவிழா

தாளவாடியை அடுத்த திகினாரை ரங்கசாமி மல்லிகாா்ஜுனா கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திகினாரையில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 1:00 am IST

தாளவாடியை அடுத்த திகினாரை ரங்கசாமி மல்லிகாா்ஜுனா கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திகினாரை ரங்கசாமி மல்லிகாா்ஜுனா கோயில் திருவிழா கணபதி பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது. அதைத் தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திகினாரையின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சப்பரம் தெப்பக்குளத்தை சென்றடைந்தது.

அங்கு உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து குளத்தின் நடுவே சப்பரத்தை சுமந்து சென்ற பக்தா்கள் குளத்தை 3 முறை சுற்றி வலம் வந்தனா். அப்போது கரையில் நின்றிருந்த பக்தா்கள் பூக்களைத் தூவி கரவொலி எழுப்பி உற்சவரை வரவேற்றனா்.

கிராமத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி தெப்பத் திருவிழா நடத்தப்படுகிறது என கிராம மக்கள் தெரிவித்தனா்.

விழாவில் தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனூா் கிராமங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். தாளவாடி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.