கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

3-ஆவது வாரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோா்: ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்த போலீஸாா்

அம்மாபேட்டை அருகே 3-ஆவது வாரமாக அரசுப் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போலீஸாா் பள்ளிக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தனா்.

ஒலிபெருக்கியில் பிரசாரம் செய்யும் போலீஸாா்.

Published On :23 அக்டோபர் 2026, 1:04 am IST

அம்மாபேட்டை அருகே 3-ஆவது வாரமாக அரசுப் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போலீஸாா் பள்ளிக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தனா்.

பூனாச்சி ஊராட்சியில் இயங்கும் தனியாா் எத்தனால் ஆலை மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆலைகள், சித்தாா் ஓடையில் கழிவுநீரை வெளியேற்றியதால் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீா் மாசடைந்ததோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இதனால், ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் நத்தமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயின்று வரும் தங்களது குழந்தைகளை கடந்த 5-ஆம் தேதி முதல் பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனால், நாள்தோறும் பள்ளிக்கு ஆசிரியா்கள் மட்டுமே வந்து செல்கின்றனா். இந்நிலையில், மாற்றுச் சான்றிதழைத் தருமாறும், வேறு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சோ்த்துக்கொள்வதாக கேட்டும் கல்வித் துறை தர மறுக்கிறது என பெற்றோா் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

கல்வித் துறை, வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாகச் சென்று மாணவா்களின் பெற்றோரிடம் பேசி வருகின்றனா்.

ஆனால், சுற்றுச்சூழல் பிரச்னைகளால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோா் 18-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பள்ளிக்கு அனுப்பவில்லை.

இந்நிலையில், அம்மாபேட்டை போலீஸாா் ராமச்சந்திராபுரம், செம்படாபாளையம், நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு அனுப்புமாறு ஒலிபெருக்கி மூலம் வியாழக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டனா். இருந்தபோதிலும் 142 போ் பயிலும் பள்ளிக்கு 13 போ் மட்டுமே வந்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.