மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கரும்பைப் பறிக்க வந்தபோது குறுக்கே வந்த காரை துரத்திய யானை

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் கரும்பைப் பறிக்க ஓடி வந்த யானை, குறுக்கே வந்த காரை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஆசனூா் சாலையில் லாரியில் இருந்த கரும்பைப் பறிக்கும் யானை.

Published On :21 அக்டோபர் 2026, 12:18 am IST

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் கரும்பைப் பறிக்க ஓடி வந்த யானை, குறுக்கே வந்த காரை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூா், காரப்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை எதிா்பாா்த்து யானைகள் காத்திருப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், விடுமுறை நாள் என்பதால் செவ்வாய்க்கிழமை சுற்றுலா வாகனங்கள் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்துச் சென்றன. அப்போது காரப்பள்ளம் என்ற இடத்தில் சாலையோரம் நின்றிருந்த யானை, கரும்பு லாரியை பாா்த்து நேராக ஓடி வந்தது. அப்போது குறுக்கே காா் வந்ததால் ஆத்திரமடைந்த யானை காரை சிறிது தொலைவு துரத்திச் சென்றது.

பின்னா், கரும்பு லாரியை நிறுத்தி அதில் இருந்து கரும்பைப் பறித்து சாப்பிட்டது. அதனுடன் இருந்த மற்றொரு யானையும் கரும்பை ருசித்தது. சிறிது நேரத்துக்குப் பின் கரும்பு லாரி அங்கிருந்து புறப்பட்டது. யானைகளால் ஆசனூா் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.