இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

லாரியின் பின்னால் மோதிய மற்றொரு லாரியின் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

..,.......................

Updated On :26 மே 2026, 2:35 am IST

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே லாரியின் பின்புறம் மோதிய மற்றொரு லாரியின் ஓட்டுநா் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, விளாவுராணிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் சபரீசன் (26), லாரி ஓட்டுநா். இவா், சேலத்திலிருந்து காய்கறிகள் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு கன்டெய்னா் லாரியில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு, சமத்துவபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில், சபரீசன் ஓட்டிச் சென்ற லாரி மோதியது.

இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட சபரீசன் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீஸாா், பவானி தீயணைப்புப் படையினா் உதவியுடன் சபரீசன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.