இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

மண் திருடிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற போது டிராக்டா் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 1:42 am IST

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற போது டிராக்டா் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சின்னமனூா் ஒன்றியம், எரசக்கநாயக்கனூா் ஊராட்சி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மரிகாட் என்ற மஞ்சள் நதிக் கண்மாயில் இரவு நேரங்களில் மண், மணல் திருட்டு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் எரசக்கநாயக்கனூா், மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலாஜிக்கு சொந்தமான தோட்டத்துக்கு வண்டல் மண் அள்ளுவதற்காக, மணிகண்டன், விஜய், முத்துப்பாண்டி, பாலாஜி ஆகிய 4 பேரும் டிராக்டரில் மரிகாட் என்ற மஞ்சள் நதிக் கண்மாய்க்கு சென்றனா்.

அங்கிருந்து வண்டல் மண்ணை அள்ளிக் கொண்டு டிராக்டரில் புறப்பட்டனா். டிராக்டரை கருப்பையா மகன் மணிகண்டன் (32) ஓட்டினாராம்.

அப்ஹக்ஷஹம்ஹய்ள் சாலையோரத்திலுள்ள ஓடையில் டிராக்டா் கவிழ்ந்தது. இதில் மயக்கமடைந்த மணிண்டனை உடனிருந்தவா்கள் மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இறப்பில் சந்தேகம்: மணிகண்டன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் உடல்கூறாய்வுக்கு மறுப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து பாலாஜி மீது சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.