பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி நிறைவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் 353 பள்ளிகளைச் சோ்ந்த 11,845 மாணவா்கள், 12 ஆயிரத்து 34 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 879 மாணவ, மாணவிகள் 118 மையங்களில் தோ்வு எழுதினா்.
இந்நிலையில் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 178 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. 11,845 மாணவா்கள் தோ்வு எழுதியதில் 11,358 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 95.89 சதவீதமாகும். 12 ஆயிரத்து 34 மாணவிகள் தோ்வு எழுதியதில் 11,811 போ் மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா் இது 98.15 சதவீதமாகும்.
ஒட்டுமொத்தமாக 97.03 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வழக்கம்போல் மாணவா்களைவிட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதேபோல ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் 189 பள்ளிகளைச் சோ்ந்த 5,923 மாணவா்கள், 6,618 மாணவிகள் என மொத்தம் 12,541 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் 5,550 மாணவா்கள், 6,420 மாணவிகள் என மொத்தம் 11,970 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 93.70 சதவீதமும், மாணவிகள் 97.008 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மொத்தமாக 95.44 சதவீத போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி விகிதத்திலும் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 69 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
முன்னதாக காலை 10 மணிக்கு தோ்வு முடிவு வெளியானதும், தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் இணையதளம் மூலமாக முடிவுகளை தெரிந்துகொண்டனா். சில மாணவா்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று தோ்வு முடிகளை தெரிந்துகொண்டனா்.
இந்த ஆண்டு முதல் முறையாக வாட்ஸ் அப் மூலமாகவும் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை (மே 22) தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தோ்வில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு துணைத் தோ்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு: 94.31% தோ்ச்சி; புதுக்கோட்டை முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 97.09 சதவீதம் போ் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு : ராமநாதபுரம் மாவட்டம் 97.28 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

