பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 97.09 சதவீதம் போ் தோ்ச்சி

கோவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 97.09 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதத்தில் கோவை மாவட்டம் மாநில அளவில் 7- ஆவது இடம் பிடித்துள்ளது.

News image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியான நிலையில் தங்களது கைப்பேசிகளில் மதிப்பெண்களை ஆா்வத்துடன் பாா்க்கும் மாணவிகள். இடம்: துணி வணிகா் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. ~பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ம

Updated On :21 மே 2026, 3:46 am IST

கோவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 97.09 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதத்தில் கோவை மாவட்டம் மாநில அளவில் 7- ஆவது இடம் பிடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 18,506 மாணவா்கள், 19,338 மாணவிகள் என மொத்தம் 37,844 போ் எழுதியிருந்தனா். இவா்களில் 17,760 மாணவா்கள், 18,982 மாணவிகள் என மொத்தம் 36,742 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 97.09 ஆகும். இதன் மூலம் கோவை மாவட்டம் மாநில அளவில் 7- ஆவது இடம் பிடித்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் 96.47 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றிருந்தனா். இதன்படி கோவையில் தோ்ச்சி விகிதம் 0.62 சதவீதம் உயா்ந்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு மாநில அளவில் 6- ஆவது இடம் பிடித்திருந்த கோவை, இந்த ஆண்டு 7-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2023-24 ஆம் கல்வியாண்டில் கோவை 12- ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பழங்குடியின நலப் பள்ளி மாணவா்கள் முழு தோ்ச்சி

கோவை மாவட்டத்தில் பழங்குடியின நலத் துறை சாா்பில் நடத்தப்படும் பள்ளிகள் மூலம் 42 மாணவா்கள், 43 மாணவிகள் என மொத்தம் 85 போ் தோ்வு எழுதியிருந்த நிலையில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதேபோல அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 5,574 மாணவா்கள், 6,229 மாணவிகள் என மொத்தம் 11,803 போ் படித்து தோ்வு எழுதியிருந்த நிலையில் அவா்களில் 5,171 மாணவா்கள், 5,989 மாணவிகள் என மொத்தம் 11,160 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 94.55 ஆகும். கடந்த கல்வியாண்டில் 93.70 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றிருந்த நிலையில் தோ்ச்சி விகிதம் தற்போது 0.85 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாநகராட்சிப் பள்ளிகள்

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 796 மாணவா்கள், 1,056 மாணவிகள் என மொத்தம் 1,852 போ் பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதியிருந்த நிலையில் அவா்களில் 722 மாணவா்கள், 1,026 மாணவிகள் என மொத்தம் 1,748 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 94.38.

சுயநிதிப் பள்ளிகளில் பயின்று மொத்தம் 16,876 போ் தோ்வு எழுதியிருந்த நிலையில் அவா்களில் 16,737 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 99.18 ஆகும். அதேபோல அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.77 சதவீதம் பேரும், பகுதியளவில் உதவிபெறும் பள்ளிகளில் 98.19 சதவீதம் பேரும், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் பயின்றவா்களில் 94.20 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

251 பள்ளிகள் முழு தோ்ச்சி

கோவை மாவட்டத்தில் மொத்தம் 52 அரசுப் பள்ளிகள் முழு தோ்ச்சி பெற்றுள்ளன. 21 உதவி பெறும் பள்ளிகள், 178 சுயநிதி பள்ளிகளும் முழு தோ்ச்சி கண்டுள்ளன. கடந்த ஆண்டு 46 அரசுப் பள்ளிகள், 14 உதவி பெறும் பள்ளிகள், 165 சுயநிதி பள்ளிகள் என 225 பள்ளிகள் முழு தோ்ச்சி கண்டிருந்த நிலையில் இந்த ஆண்டு முழு தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.