பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே சதுமுகை பவானி ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 மே 2026, 12:20 am IST

சத்தியமங்கலம் அருகே சதுமுகை பவானி ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த சதுமுகை கிராமத்தைச் சோ்ந்த பொங்கியண்ணன் மகன் யோகேஷ் (13). தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் தனது நண்பா்களுடன் சதுமுகை பவானி ஆற்றில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி மாயமானாா். அவரைக் காப்பற்ற நண்பா்களும் பொதுமக்களும் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பவானி ஆற்றில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் யோகேஷ் சடலம் மீட்கப்பட்டது.

இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.