விளையாட்டு விடுதி மாணவா் சோ்க்கைக்கு நடத்தப்பட்ட தோ்வுப் போட்டியில் 90 போ் பங்கேற்றனா்.
விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிச் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம் கடந்த மாதம் 8- ஆம் தேதி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 6, 7, 8, 9 மற்றும் 11- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கான தோ்வு போட்டி ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கையுந்துபந்து, கிரிக்கெட் (மாணவா்கள்), கைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
ஈரோடு மாவட்டத்தில் 111 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியில் தோ்வு செய்யப்படும் மாணவா்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா். இதேபோன்று விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவியருக்கான மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 7 மணியளவில் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூரில் விளையாட்டு விடுதி சோ்க்கை தோ்வு தொடக்கம்: 194 மாணவா்கள் பங்கேற்பு

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை!

விளையாட்டு விடுதிகளில் சேர வரும் 12-இல் மாநில தோ்வு போட்டிகள்: ஆட்சியா் மு.பிரதாப் தகவல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

