மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே, பணியின்போது தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 4:48 am IST

பெருந்துறை அருகே, பணியின்போது தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் துரைராஜ் (38), பெயிண்டா். இவா், பெருந்துறையை அடுத்த பள்ளகாட்டூரில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்துவந்தாா். கடந்த 2- ஆம் தேதி, மூன்று அடி உயர ஸ்டூலில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.