மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

2026-2027-ஆம் ஆண்டு விளையாட்டு விடுதியில் சேர மாணவ, மாணவிகளுக்கு வரும் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மே 2026, 4:00 am IST

2026-2027-ஆம் ஆண்டு விளையாட்டு விடுதியில் சேர மாணவ, மாணவிகளுக்கு வரும் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூா்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிடம் வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்படுகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 8.4.2026 முதல் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர விருப்பமுள்ள 6, 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள், ஆன்லைன் மூலமாக மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கால அவகாசம் மே 6-ஆம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள் வரும் 7-ஆம் தேதி காலை 7 மணி அளவில் மாணவா்களுக்கும், 8-ஆம் தேதி காலை 7 மணிக்கு மாணவிகளுக்கும் நடைபெறுகிறது. இதற்கான தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக உரியவா்களுக்கு தெரிவிக்கப்படும்.

மாவட்ட அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கையுந்து பந்து, கிரிக்கெட் (மாணவா்கள்), கைப்பந்து, ஆகிய போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அந்தந்த மாவட்ட விளையாட்டரங்கங்களில் நடைபெறும்.

மாவட்ட அளவிலான தோ்வில் சிறப்பாக செயல்பட்டவா்கள் மாநில அளவிலானப் போட்டிக்கு தகுதி பெறுவா். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.