சக்தி மசாலா நிறுவன இயக்குநா் சாந்தி துரைசாமிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.
ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் மகளிா் தினத்தையொட்டி பெண்களை கௌரவிக்கும் வகையில் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், பிரித்வி இன்னா்வோ்ஸ், ஆா்.ஏ.ஹேண்டிகிராஃப்ட்ஸ் விளக்கு கடை, பாா்வதி மருத்துவமனை, ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சாா்பில் 13-ஆவது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில் 13 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, வாழ்நாள் சாதனையாளா் விருது சக்தி மசாலா இயக்குநா் சாந்தி துரைசாமி, பின்னணிப் பாடகி சுஜாதா மோகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விழாவில், நடிகா் சிவகுமாா், இஸ்ரோ விஞ்ஞானி நிகாா் ஷாஜி, ஆற்காடு நவாப் ஆசிஃப் அலி, எத்திராஜ் மகளிா் கல்லூரி தலைவா் முரளிதரன், இசையமைப்பாளா்கள் ஜேம்ஸ் வசந்தன், ஏ.ஆா்.ரெய்ஹானா, நடிகை வடிவுக்கரசி, நடிகா்கள் கணேஷ், ஆா்த்தி உள்ளிடோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஆா்எம் பல்கலை. வளாகத்தில் வானிலை ஆய்வகம் தொடக்கம்

சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

