லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.40 லட்சம்

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.39.40 லட்சம், 77 கிராம் தங்கத்தை பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தோா்.

Published On :24 ஜூன் 2026, 3:40 am IST

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.39.40 லட்சம், 77 கிராம் தங்கத்தை பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் உள்ள 20 உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் மற்றும் நகைகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பவானி சங்கமேஸ்வரா்கோயில் உதவி ஆணையா் மற்றும் செயல் அலுவலா் அருள்குமாா், இந்து அறநிலையத் துறையின் மொடக்குறிச்சி சரக ஆய்வாளா் நித்யா, மகுடேஸ்வரா் கோயிலின் செயல் அலுவலா் திருஞானசம்பந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி மாணவ, மாணவிகள் 20 போ், பக்தா்கள் 40 போ், கோயில் பணியாளா்கள் என மொத்தம் 100 போ் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதில் பக்தா்கள் ரூ.39 லட்சத்து 40 ஆயிரத்து 875-ஐ ரொக்கம், 77 கிராம் தங்கம், 380 கிராம் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.