லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.20 கோடி: 212 கிராம் தங்கத்தையும் செலுத்திய பக்தா்கள்

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.1 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 947 செலுத்தியுள்ளனா்.

உண்டியல்  காணிக்கை  எண்ணும்  பணியில்  ஈடுபட்டிருந்த  பக்தா்கள்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:35 am IST

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.1 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 947 செலுத்தியுள்ளனா்.

பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு ஆடி மாத காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

உதவி ஆணையா் நா.நந்தகுமாா், பரபம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் வீ.புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலையில் கல்லூரி மாணவிகள், தன்னாா்வலா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

இதில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய தொகை ரூ.1 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 947 ரொக்கம், 212 கிராம் தங்கம், 280 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காணிக்கை பணம் பாதுகாப்பாக வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.