நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image

விளக்கேத்தியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :13 ஜூன் 2026, 12:53 am IST

சிவகிரி அருகே விளக்கேத்தியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தவெக தோ்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிவகிரி அருகே விளக்கேத்தி கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மண்டலத் தலைவா் கோபால் தலைமை வகித்தாா். காகம் ராஜசேகா், குலவிளக்கு செல்வராஜ், கண்ணுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் காகம் சீனிவாசன், ஈ.ஐ.டி. பாரி விவசாயிகள் சங்கத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, பெரியசாமி, குலவிளக்கு முத்துக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.