பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கடம்பூா் அருகே யானை தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கடம்பூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த  பசுவராஜ்

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

ஈரோடு மாவட்டம், கடம்பூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் பசுவராஜ் (40). கட்டடத் தொழிலாளி. இவா் கடம்பூரில் வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது 12 மைல் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை திடீரென இரு சக்கர வாகனத்தில் சென்ற பசுவராஜை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பசுவராஜ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அங்கு நின்றிருந்த யானையை விரட்டினா். யானை காட்டுக்குள் சென்ற பிறகு பசுவராஜ் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த பசுவராஜுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

யானை தாக்கி உயிரிழந்த பசுவராஜ் குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதல்கட்ட நிவாரணத்தொகை ரூ.50 ஆயிரத்தை பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.தமிழ்ச்செல்வி வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.